ETV Bharat / state

'4 லட்சம் தமிழ் சொற்கள் கண்டுபிடிப்பு' - அமைச்சர் பாண்டியராஜன் தகவல்!

சென்னை: தமிழ் மொழி பெருமையின் நீள, அகலத்தை அளக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமான சொற்களை கண்டுபிடித்திருப்பதாகவும் சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன்
author img

By

Published : Jul 2, 2019, 9:10 PM IST

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் செம்மலை, தமிழ் மொழியில் புதிய சொற்கள் உருவாக்கும் பணி தொடர்கிறதா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பாண்டியராஜன், "சொற்குவை என்ற திட்டம் உருவாக்கப்பட்டு, இதற்காக 1 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்து, புதிய தமிழ் சொற்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஆங்கிலத்தில் 1,71,476 வார்த்தைகள் தான் உள்ளன. ஆனால், தமிழில் இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமான வார்த்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்னும் 6 லட்சத்திற்கும் அதிகமான வார்த்தைகள் இருக்கும்" என்றார்.

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன்

மேலும் பேசிய அவர், "இந்த பணியில் இளைஞர்களை அதிகளவில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், தமிழ் மொழி பெருமையின் நீள, அகலத்தை அளவிடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

Intro:தமிழ் பெருமையின் நீள, அகலத்தை அளக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளளோம்
சட்டப்பேரவையில் அமைச்சர் பாண்டியராஜன் தகவல்Body:தமிழ் பெருமையின் நீள, அகலத்தை அளக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளளோம்
சட்டப்பேரவையில் அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

சென்னை,

தமிழ் மொழி பெருமையின் நீள, அகலத்தை அளக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமான சொற்களை கண்டுபிடித்திருப்பதாகவும் சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய அதிமுக உறுப்பினர் செம்மலை, தமிழ் மொழியில் புதிய சொற்கள் உருவாக்கும் பணி தொடர்கிறதா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பாண்டியராஜன், சொற்குவை என்ற திட்டம் உருவாக்கப்பட்டு, இதற்காக 1 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்து, புதிய தமிழ் சொற்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் எனவும், ஆங்கிலத்தில் 1,71,476 வார்த்தைகள் தான் உள்ளன என்றும், ஆனால், தமிழில் இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமான வார்த்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும், இன்னும் 6 லட்சத்திற்கும் அதிகமான வார்த்தைகள் இருக்கும் என கருதுவதாகவும் கூறினார்.
மேலும் இந்த பணியில் இளைஞர்களை அதிகளவில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், தமிழ் மொழி பெருமையின் நீள, அகலத்தை அளவிடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய செம்மலை, ‛‛கலைச் சொற்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன் என்றும், நவீன கணினி உலகிற்கு ஏற்ப, அறிவியல் சொற்களையும் கண்டுபிடிக்க வேண்டும் ’’ என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பாண்டியராஜன், கண்டுபிடிக்கப்பட்டவை வெறும் கலை சொற்கள் மட்டும் கிடையாது எனவும், அறிவியல் சொற்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.