ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளனர்.
இந்நிலையில் பேரறிவாளனுக்கு இன்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை தலைவர் பொன்னம்பல நமச்சிவாயம் கூறுகையில், தற்போது அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் எப்போது அவர் மீண்டும் சிறைக்குத் திரும்புவார் உள்ளிட்டவை குறித்து நாளை அவர் உடல் நிலையை பரிசோதித்த பின்னர் முடிவெடுக்கப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளார்.