ETV Bharat / state

திரும்பி வந்துட்டேனு சொல்லு: சட்டப்பேரவைக்கு வந்த புதுச்சேரி முதலமைச்சர்!

புதுச்சேரி: மக்களவைத் தேர்தல் நடைபெற்றதையொட்டி அன்றாட அரசுப் பணிகளில் இருந்து விலகியிருந்த முதலமைச்சர் நாராயணசாமி இன்று சட்டப்பேரவைக்கு வந்து தனது பணிகளைத் தொடங்கினார்.

திரும்பி வந்துட்டேனு சொல்லு: சட்டப்பேரவைக்கு வந்த புதுச்சேரி முதல்வர்!
author img

By

Published : Apr 23, 2019, 8:27 PM IST

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இதில் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடந்தது.

இதனால் புதுச்சேரியில் மார்ச் 23ஆம் தேதியே தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்தது. இதற்காக முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை அலுவகத்தில் தன்னுடைய அன்றாடப் பணிகளில் இருந்து விலகி இருந்தார்.

இந்நிலையில், 30 நாட்களுக்கு பிறகு இன்று வழக்கம் போல் சட்டப்பேரவைக்கு வந்து தனது வழக்கமான அரசுப் பணிகளை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்தார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கேரளா மாநிலம் வயநாட்டில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டதால், தேர்தல் பரப்புரைக்காக அவர் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Intro:தேர்தல் நடைபெறுவதையொட்டி சட்டப்பேரவை அன்றாடப் பணிகளில் இருந்து விலகியிருந்த முதல்வர் நாராயணசாமி தேர்தல் முடிந்த பிறகு இன்று சட்டப்பேரவைக்கு வந்து தனது பணிகளைத் தொடங்கினார்

Body:புதுச்சேரி 23

புதுச்சேரியில் தேர்தல் நன்னடத்தை விதி
அமலுக்கு வந்தது அடுத்து முதல்வர் நாராயணசாமி சட்டசபை அலுவகத்தில் தன்னுடைய அன்றாட பணிகளில் இருந்து விலகி இருந்தார் தற்போது தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தது அடுத்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாட்டில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதால் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் ,அமைச்சர்கள் மற்றும் முதல் அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் கடந்த சில நாட்களாக வயநாட்டில் முகாமிட்டிருந்தனர்

இந்நிலையில் நேற்று இரவு முதல்வர் நாராயணசாமி புதுச்சேரிக்கு திரும்பினார் இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்திற்கு முதல்வர் நாராயணசாமி வந்தார் சிறிது நேரம் இருந்த அவர் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் தனது அன்றாட பணிகளை கவனிப்பதற்காக வந்திருந்தார் கடந்த 30 நாட்களுக்கு நாட்களுக்கு பிறகு அவர் சட்டசபை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Conclusion:தேர்தல் நடைபெறுவதையொட்டி சட்டப்பேரவை அன்றாடப் பணிகளில் இருந்து விலகியிருந்த முதல்வர் நாராயணசாமி தேர்தல் முடிந்த பிறகு இன்று சட்டப்பேரவைக்கு வந்து தனது பணிகளைத் தொடங்கினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.