புதுச்சேரி காவல்துறை இயக்கநர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் காவல்துறை இயக்குநர் சுந்தரி நந்தா கூறியதாவது,
புதுச்சேரி மாநிலத்தில் வரும் 11ம் தேதி முதல் ஹெல்மெட் மற்றும் சீட் பெட் அணிவது கட்டாயமாக்கப்படும். சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் முதல் முறை ரு.100 அபராதமும் இரண்டாம் முறை ரு.300 அபராதம் விதிக்கப்படும்.
மூன்று முறைக்கு மேல் இதே தவறை தொடர்ந்தால் வாகனம் ஓட்டுபவரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். புதுச்சேரியில் 95 சதவீதம் பேர் ஏற்கனவே ஹெல்மெட் வாங்கி வைத்துள்ளனர். ஆனால் அதனை பயன்படுத்துவதில்லை.
கடந்த 6 மாதங்களாக ஹெல்மெட் அணிவது குறித்து காவல்துறையினர் கண்காணித்து வந்ததில் பொதுமக்கள் ஹெல்மெட் அணிவதை விரும்புவதில்லை. கடந்த மூன்று வருடங்களில் 322 பேர் ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்துள்ளனர். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் காவலர்களுக்கும் இந்த அபராதம் பொருந்தும்.
புதுச்சேரியில் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 1 ம் தேதி முதல் கட்டாய ஹெல்மெட் நடைமுறைபடுத்திய போதும், பல்வேறு அரசியல் சமூக அமைப்பினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. மாநில முதலமைச்சர் நாராயணாமி ஹெல்மெட் அணிவது படிபடியாக அமல்படுத்தப்படும் என்று கூறியப் பிறகும், ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படாமல் இருக்கிறது, என்றார்.