தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ், விழுப்புரம் தொகுதியில் வடிவேல் ராவணன், கடலூர் தொகுதியில் ரா. கோவிந்த சாமி, அரகோணம் தொகுதியில் ஏ கே மூர்த்தி, மத்திய சென்னை தொகுதியில் சாம் பால் ஆகியோர் பாமக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மீதம் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விபரம் குறித்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தல்: பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு - election candidate
சென்னை: அதிமுக கூட்டணியில் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
election candidate
தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ், விழுப்புரம் தொகுதியில் வடிவேல் ராவணன், கடலூர் தொகுதியில் ரா. கோவிந்த சாமி, அரகோணம் தொகுதியில் ஏ கே மூர்த்தி, மத்திய சென்னை தொகுதியில் சாம் பால் ஆகியோர் பாமக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மீதம் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விபரம் குறித்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை மையத்தடுப்பில் கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலி.
கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் பிருத்திவிராஜ், கிருஷ்ணகுமார், சந்தோஷ்குமார் உள்ளிட்ட 8 பேர் ஈரோட்டில் உள்ள தங்கள் நண்பர் அரவிந்தின் அக்கா திருமணத்திற்கு காரில் சென்றுள்ளனர். திருமணம் முடிந்து மாலை மீண்டும் கோவைக்கு செல்ல கிளம்பியுள்ளனர். காரை இயக்கிய கிருஷ்ணகுமார் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக காரை இயக்கியுள்ளார். இதில் செங்கப்பள்ளி அருகே கார் வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை மையத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பிருத்திவிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிருஷ்ணகுமார் பலத்த காயத்துடன் மருத்துவமனை கொண்டு.செல்லும் வழியில் உயிரிழந்தார். சந்தோஷ்குமார் பலத்த காயத்துடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற 5 பேருக்கும் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஊத்துக்குளி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.