ETV Bharat / state

மூன்று நாட்களுக்கு வெப்பம் நீடிக்கும் - சென்னை வானிலை மையம்

சென்னை: திருவள்ளூர், வேலுார், திருவண்ணாமலை உள்பட சில மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல்காற்று அதிகம் வீச வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

WEATHER NEWS
author img

By

Published : Jun 18, 2019, 12:03 AM IST

தமிழ்நாடு முழுவதும் பகல் பொழுதில் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுவதால், வெப்பச் சலனத்தால் ஈரோடு, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமாரி, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரித்து அனல் காற்று அதிகம் வீச வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மதுரை, திண்டுக்கல், சேலம், நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும். இதனால் காலை 11 மணியில் இருந்து மாலை 4 மணி வரை நேரடியாக சூரிய ஒளி உடம்பில் படாதவாறு பார்த்துக்கொள்வது நல்லது எனவும், சென்னையில் அதிகபட்ச வெப்பம் 41 டிகிரி செல்சியசாகவும், குறைந்த பட்சம் 31 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Intro:Body:தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு வெப்பம் நீடிக்கும் - வானிலை மையம்

தமிழகம் முழுவதும் பகல் பொழுதில் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக ஈரோடு ,கோவை ,நீலகிரி ,தேனி ,திண்டுக்கல் ,கன்னியாகுமாரி ,சிவங்கங்கை ,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

திருவள்ளூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை,சென்னை ,காஞ்சிபுரம் ,கடலூர் ,விழுப்புரம் ,நாகை ,திருச்சி ஆகியமாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை அதிகரித்து அனல்காற்று அதிகம் வீச வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதேபோல் மதுரை, திண்டுக்கல், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். இதனால் காலை 11 மணியில் இருந்து மாலை 4 மணி நேரை நேரடியாக சூரிய ஒளி உடம்பில் படாதவாறு பார்த்துக்கொள்வது நல்லது.

சென்னையை நகரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பம் 41 டிகிரி செல்சியசாகவும், குறைந்த பட்சம் 31 டிகிரி செல்சியசாகவும் இருக்கும்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.