தமிழ்நாடு டிஜிபியாக உள்ள டி.கே.ராஜேந்திரன் இந்த மாதத்தோடு ஓய்வு பெறவுள்ள நிலையில், இன்று புதிய டிஜிபியாக திரிபாதி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு வருவதற்கு முன்னதாகவே தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை, திரிபாதி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ஐந்து நிமிடங்களே நீடித்தது.
இதனையடுத்து நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சண்முகத்தையும், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டியையும் சந்தித்து பேசினார். மேலும் முதலமைச்சரின் செயலாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.