ETV Bharat / state

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புனேவில் நீட், ஜெஇஇ தேர்வுக்கு இலவச பயிற்சி - pune dakshan organization

சென்னை: புனேவில் உள்ள தக்ஷன் நிறுவனம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு   நீட், ஜெஇஇ தேர்வுக்கு இலவச பயிற்சியளிக்க இருப்பதாக, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை
author img

By

Published : Jul 18, 2019, 12:38 PM IST

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள உத்தரவில், ”2021ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நீட் மற்றும் ஜெஇஇ போட்டித் தேர்வுகளுக்கு 2019-20ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பில் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களை திறம்படத் தயார் செய்யும் வகையில், ஓராண்டு பயிற்சியை புனேவில் உள்ள தக்ஷன் நிறுவனம் வழங்க உள்ளது.

இந்த பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை தக்ஷனா நிறுவனம் விதித்துள்ளது.

அந்த விதிமுறைகள் பின்வருமாறு:

1. 12ஆம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களாக இருக்க வேண்டும்.

2. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 70 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

3. புனேவில் உள்ள தக்ஷனா நிறுவனத்தில் தங்கிப் பயில விருப்பம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் .

4. தேர்வு செய்யப்படும் மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து விருப்பக் கடிதத்தை அந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற வேண்டும்.

5. ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களாக இருக்க வேண்டும்.

மேலும் அந்த உத்தரவில், “ உணவு, விடுதி வசதி, பயிற்சிக் கட்டணம் அனைத்தும் இலவசமாக அந்த நிறுவனத்தால் வழங்கப்படும். ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இவர்களுக்கு டிசம்பர் 8ஆம் தேதி தக்ஷன் நிறுவனத்தால் நடத்தப்படும் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.”, எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக நடத்திய நீட் பயிற்சியில் மாணவர்கள் பெரிய அளவில் சேரவில்லை. இந்த ஆண்டு 2 ஆயிரத்து 583 மாணவர்கள் தகுதி பெற்றாலும், ஒரு மாணவர் மட்டுமே மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை புதிய முறையில் நீட் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளது.

Intro: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புனேவில்
1 வருடம் நீட், ஜெஇஇ தேர்வுக்கு பயிற்சி
Body:சென்னை,
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள உத்தரவில், 2021 ம் ஆண்டு நடைபெற இருக்கும் நீட் மற்றும் ஜெஇஇ போட்டித் தேர்வுகளுக்கு 2019-20 ம் கல்வியாண்டில் 12 ம் வகுப்பில் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களை திறம்பட தயார் செய்யும் வகையில் அவர்களுக்கு ஒராண்டு பயிற்சியினை புனேவில் உள்ள தக் ஷனா நிறுவனம் வழங்க உள்ளது.
இந்த பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள் 2019-20ம் கல்வி ஆண்டில் 12 ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களாக இருக்க வேண்டும்.
10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 70 சதவீத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

நீட், ஜெ.இ.இ. போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் ஓராண்டு ஏப்ரல் 2020 முதல் ஏப்ரல் 2021 வரை) புனேவில் உள்ள தக் ஷனா நிறுவனத்தில் தங்கி பயில விரும்பம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் . உணவு, விடுதி வசதி, பயிற்சிக் கட்டணம் அனைத்தும் இலவசமாக அந்த நிறுவனத்தால் வழங்கப்படும்.
இந்த பயிற்சி ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து விருப்பக்கடித்தினை அந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற வேண்டும். ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
இவர்களுக்கு டிசம்பர் 8 ந் தேதி தக் ஷன் நிறுவனத்தால் நடத்தப்படும் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அதில் கூறியுள்ளார்.

அரசு சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தி நீட் பயிற்சியில் மாணவர்கள் பெரிய அளவில் சேரவில்லை. இந்த ஆண்டு 2,583 மாணவர்கள் தகுதிப்பெற்றாலும் ஒரு மாணவர் மட்டுமே மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை புதிய முறையில் நீட் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.