வட சென்னை மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காளியம்மாளை ஆதரித்து ராயபுரம் அஜீஸ் முகமது கவுஸ் தெருவில் சீமான் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்குச் சேகரித்தார். அப்போது பேசிய அவர்,

‘மக்களை வாழ விடாமல் கையூட்டு கலாச்சாரம், அனைத்து ஆண்ட கட்சிகளுக்குள்ளும் திளைத்து வருகிறது. நீர் மேலாண்மை, உணவு மேலாண்மை என எந்த திட்டங்களும் இவர்களிடத்தில் இல்லை. மக்களை முட்டாள்களாக்கி அதன் மூலம் அவர்கள் வாழப்பார்க்கிறார்கள். சுகாதாரமான, சுத்தமான, வலிமையான தேசம் வேண்டுமெனில் காங்கிரஸ், பாஜகவை விரட்ட வேண்டும்.
வாரிசு அரசியல் வேண்டாம் என்னும் மோடி ஒ.பி.எஸ் மகனுக்கு வாக்குக் கேட்டு வருகிறார் என்றால் இந்த நாடு என்ன நிலையில் உள்ளது என்று எண்ணிப்பார்த்து வாக்களியுங்கள். எங்கள் வளர்ச்சியையும், மக்கள் எங்களுக்கு கொடுக்கும் ஆதரவையும் பார்த்த பயத்தினால் தான், வாக்குப் பெட்டியில் கூட நம் சின்னமான ’விவசாயி’ சின்னம் தெரியாதபடி மறைத்துள்ளனர். அங்கு தான் விவசாயிகளைக் கொல்கிறார்கள் என்றால், இங்கும் அதே வேலையைப் பார்த்திருக்கிறார்கள்’ என்று குற்றஞ்சாட்டினார்.