வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று ஃபானி புயல் குறித்து தகவல் தெரிவிக்க செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 'தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தம் தற்போது புயலாக மாறியுள்ளது. ஃபானி (FANI) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் சென்னைக்கு கிழக்கில் சுமார் 1,250 கிமீ தொலைவில் உள்ளது. இது, தொடர்ந்து வலுப்பெற்று தீவிரப் புயலாக வலுப்பெறக் கூடும்.
மேலும் புயல் வடமேற்குப் பகுதியில் நகர்ந்து ஏப்ரல் 30ஆம் தேதி மாலை வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா பகுதிக்கு வரக்கூடும். தற்போதைய நிலவரத்தின்படி தமிழ்நாடு கடற்கரையை கடப்பதற்கு வாய்ப்பு இல்லை. அதில் சென்னையில் மழைக்கு வாய்ப்பு குறைவுதான். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது' என அவர் தெரிவித்தார்.