ETV Bharat / state

‘மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அடிமையாகவுள்ளது’ - கே.ஆர்.ராமசாமி!

சென்னை: மத்திய அரசிடம் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட நீட் மசோதாவை மீண்டும் நிறைவேற்ற அரசு முன்வரவில்லை என்றும், இது குறித்து எங்களைப் பேச அனுமதிக்காததையும் கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மத்திய
author img

By

Published : Jul 10, 2019, 3:22 PM IST

இதுகுறித்து சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்து திருப்பி அனுப்பியதை 19 மாதங்கள் காலதாமதம் செய்துள்ளது. இதனால் தற்போது மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட முடியவில்லை என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், இந்த தீர்மானம் கொண்டு வந்தது காங்கிரஸ் தான் என குற்றம்சாட்டினார். அதற்கு நாங்கள் எழுந்து நீங்கள் கூறியது தவறு என்றோம். காங்கிரஸ் கட்சி கூறியது என்னவென்றால், நீட் தேர்வை விரும்பும் மாநிலங்கள் பின்பற்றலாம் என்றோமே தவிர, கட்டாயப்படுத்தவில்லை.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நீட் தேர்வில் இருந்து விலக்கு வாங்கினார். அவர்களைப் போல் இந்த அரசாங்கம் நீட் தேர்வை அணுகவில்லை. மத்திய அரசுக்கு அடிமையாக உள்ளனர். தமிழ்நாடு மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றி வருகின்றனர். மத்திய அரசிடம் இருந்து வந்த மசோதாவை அனுப்பி மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற முன்வரவில்லை. மேலும் இதை பற்றி பேச எங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம் என கூறினார்.

Intro:nullBody:காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமசாமி பேட்டி

இன்று சட்ட மன்றத்தில் நேரம் இல்லா நேரத்தில் எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு தவறுதலாக முடிவை எடுத்துள்ளது, தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்கள் மத்திய அரசு நிராகரித்து திருப்பி அனுப்பியதை 19 மாதங்கள் மறைத்து காலதாமதம் செய்துள்ளது. காலத்தாமதம் செய்துள்ளதால் தற்போது மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட முடியவில்லை.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் இந்த தீர்மானம் கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி என குற்றம்சாட்டினார்.

அதற்கு நாங்கள் எழுந்து நீங்கள் கூறியது தவறு என்று கூறினோம். காங்கிரஸ் கட்சி இந்திய முழுவதும் நீட் தேர்வு விரும்பும் மாநிலம் பின்பற்றலாம் என கூறியது தவிர கட்டாயம் படுத்தவில்லை.

அதேபோல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீட் தேர்வில் இருந்து விலக்கு வாங்கினார். அது போல் இந்த அரசு நீட் விவகாரத்தில் சரியாக அனுகவில்லை.

இந்த அரசு மத்திய அரசுக்கு அடிமையாக உள்ளனர். பல ஊழல்கள் செய்துள்ளதால் அவர்கள் தயவு இல்லாமல் ஆட்சி செய்ய முடியாது.

தமிழக மக்களையும்,. மாணவர்களை ஏமாற்று வருகின்றனர். பல மானவர்கள் உயிர் போக இவர்கள் காரணம். மத்திய அரசிடம் இருந்து வந்த மசோதாவை அனுப்பி மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற முன்வரவில்லை. மேலும் இதை பற்றி பேச எங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்துள்ளது என கூறினார்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.