ETV Bharat / state

12ஆம் வகுப்பில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடும் சரிவு! - தேர்ச்சி விகிதம்

சென்னை: அரசுப் பள்ளிகளின் 100 சதவீதம் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கிடுகிடுவென சரிந்துள்ளது கல்வியாளர்கள் மத்தியல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12ஆம் வகுப்பில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடும் சரிவு!
author img

By

Published : Apr 26, 2019, 12:02 AM IST

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதுகுறித்த புள்ளி விபரங்கள் தற்போது வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதிய 2,700 அரசுப் பள்ளிகளில், வெறும் 80 பள்ளிகள் மட்டுமே 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. இதற்கு மாறாக 1,200 தனியார் பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன.

2018ஆம் ஆண்டு 238 அரசுப் பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சியைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெறும் 80 பள்ளிகள் மட்டுமே 100 விழுக்காடு தேர்ச்சியைப் பெற்றிருப்பது கல்வித்துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மேலும் இயற்பியல், வேதியியல், உயிரியல் என முக்கிய பாடங்களில் நூற்றுக்கு நூறு எடுத்த மாணவர்கள் எண்ணிக்கையும் பெரிய அளவிற்கு இல்லை என்றும், இரட்டை இலக்க எண்களில் மட்டுமே மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர் என்றும் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிகபட்சமாக கணிப்பொறி அறிவியல் பாடத்தில் 1,500 பேரும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 1,200 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

 12 ம் வகுப்பில் அரசுப் பள்ளிகளின் 
தேர்ச்சி விகிதம்  கடும் சரிவு
 
சென்னை,  அரசுப் பள்ளிகளின் 100 சதவீதம் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கிடுகிடுவென சரிந்துள்ளது கல்வியாளர்கள் மத்தியல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 1ந் தேதி முதல் 19 ந் தேதி வரையில் நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 19 ந் தேதி வெளியிடப்பட்டது. அப்போது மாணவர்களின் தேர்ச்சி குறித்த புள்ளி விபரங்களை மட்டுமே அளித்தனர். அதில் பல புள்ளி விபரங்களை வெளியிடாமல் இருந்தனர். முக்கியமாக மாணவர்களில் எத்தனைப் பேர் எந்தப் பாடத்தில் 100 சதவீதம் மதிப்பெண்களை பெற்றனர் என்ற விபரம் இல்லாமல் இருந்தது. அதேபோல் குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு இடையே மாணவர்கள் எத்தனைப் பேர் குறிப்பிட்ட மதிப்பெண்கள் பெற்றனர் என்ற விபரத்தையும் வெளியிடவில்லை. 
இந்த நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 19ஆம் தேதி காலை வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் 91.3 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதிய  2700 அரசு பள்ளிகளில் வெறும் 80 பள்ளிகள் மட்டுமே  நூறு சதவீதம்  தேர்ச்சி பெற்றுள்ளது. இதற்கு மாறாக 1200 தனியார் பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. 
2018  ம் ஆண்டு 238 அரசுப் பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சியை  பெற்ற நிலையில், தற்போது வெறும் 80 பள்ளிகள் மட்டுமே 100 விழுக்காடு தேர்ச்சியை பெற்றிருப்பது கல்வித்துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 
 மேலும் இயற்பியல், வேதியியல், உயிரியல் என முக்கிய பாடங்களில் நூற்றுக்கு நூறு எடுத்த மாணவர்கள் எண்ணிக்கையும் பெரிய அளவிற்கு இல்லை என்றும், இரட்டை இலக்க எண்களில் மட்டுமே மாணவர்கள் 100 க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து உள்ளனர் என்றும் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 அதிகபட்சமாக கணிப்பொறி அறிவியல் பாடத்தில் 1500 பேரும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 1200 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
 
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.