சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பிரசன்னா, அவரது மனைவி அர்ச்சனா, தாய் ரேவதி ஆகியோர் குளிர்பதனப் பெட்டி வெடித்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் பல்வேறு தரப்பினருக்கும் அதிர்ச்சியை அளித்தது. இந்நிலையில் விபத்து தொடர்பாக தடயவியல் நிபுணர் சோபியா தலைமையில் சோதனை செய்யப்பட்டது.
அதேபோல், முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிகளவு புகையை சுவாசித்ததால் உயிரிழந்ததாகவும், சுவாச குழாய்கள், நுரையீரல் பகுதிகளில் அதிகளவு புகை உட்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. மேலும் காவல்துறையினர் சார்பாகவும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.