ஒடிசாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஐந்தாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்க உள்ள நவீன் பட்நாயக்கிற்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க, பாராட்டதக்க வெற்றியை பெற்றுள்ளீர்கள். ஒடிசா முதலமைச்சராக சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்தார்.
நேற்று வெளியான ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் முடிவில் நவீன் பட்நாயக் கட்சியான பிஜு ஜனதா தளம் 146 தொகுதிகளில் 112 தொகுதியை கைப்பற்றி தன் தனி பெரும்பான்மையை நிரூபித்தது. மேலும், மக்களவைத் தேர்தலில் 21 தொகுதிகளில் 12 தொகுதியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.