இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேலூர் நாடாளுமன்றத் தேர்தலை பணப்பட்டுவாடா போன்ற சட்டவிரோத செயல்களால் தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது.
தற்போது வேலூர் தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யமானது எதிர்வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் மிகுந்த உத்வேகத்துடன் போட்டியிட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால், இந்தத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக யாரும் போட்டியிடப் போவதில்லை" என அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தங்கள் கட்சியும் வேலூர் தேர்தலில் போட்டியிடாது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.