தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தலைவர் நவின் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பின்னர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், "மோடி அரசு வரவு செலவு திட்டத்தை அறிவித்து உள்ளது. இதில் விளிம்பு நிலை மக்களுக்கு எந்த திட்டமும் இல்லை. இந்த பட்ஜெட்டில் கிராமப்புற வேலை வாய்ப்பான நூறு நாள் வேலை திட்டத்தின் நிதி குறைக்கப்பட்டுள்ளது. கல்வியை அறிவுமயமாக்குவதை விட்டுவிட்டு, காவிமயமாக்க பாஜக நினைக்கிறது" என்றார்.