ETV Bharat / state

பயணங்கள் முடிவதில்லை... நாளை டெல்லிக்கு பறக்கும் ஓபிஎஸ்

சென்னை: அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நாளை டெல்லி செல்ல இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

eps
author img

By

Published : Jun 19, 2019, 10:35 PM IST

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை எழுந்தபோது, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி தாங்கள் இருவரும் ஒற்றுமையாய் இருப்பதாக எவ்வளவு தான் முயற்சித்தாலும், இருவருக்கும் இடையேயான உட்கட்சிப் பூசல்கள் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே நடக்கும் பனிப்போரை நிரூபித்துக் கொண்டே தான் இருக்கின்றன.

முதலமைச்சர் பழனிசாமி கடந்த வாரம் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினார். இந்நிலையில், மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள நாளை துணை முதல்வர் ஓபிஎஸ் டெல்லி செல்ல உள்ளார். அங்கு மத்திய அமைச்சர்களை சந்திக்க நேரம் கேட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் டெல்லி சென்று அமைச்சர்களை சந்தித்த முதலைச்சர் பழனிசாமி ஒற்றை தலைமை பிரச்னை வரும்போது தமக்கு கட்சி ரீதியாகவும் மத்திய அரசு என்ற வகையிலும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்திக்க நேரம் கேட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

‘விலக்க’ம் ஏன்?

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து அதிமுக படுதோல்வி அடைந்தது. மத்தியில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்ற ஓபிஎஸ் இபிஎஸ், தமிழ்நாடு திரும்பிய பின்னர், ஒன்றாக ஒரு நிகழ்வில் கூட சேர்ந்து பங்கேற்கவில்லை.

ஓபிஎஸ் மகனும், அதிமுக தரப்பில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு மக்களவை உறுப்பினரான ரவீந்திரநாத் குமார், ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபோது கூட கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான பழனிசாமி கலந்துகொள்ளவில்லை. இபிஎஸ் தரப்பு அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி ஆகியோர் பங்கேற்கவில்லை. ஜெயலலிதா நினைவிடம் இன்றும் அதிமுக தொண்டர்களால் முக்கியமாக பார்க்கப்பட்டு வருகிறது. முக்கியமான இந்த நிகழ்வில் முதலமைச்சர் பங்கேற்காதது தொண்டர்களுக்கு வருத்தத்தை அளித்தது.

காயிதே மில்லத் பிறந்த நாளுக்கு அவரது நினைவிடத்தில் துணை முதலமைச்சர் மட்டுமே மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் கலந்து கொள்ளவில்லை. அதிமுக சார்பில் நடந்த இப்தார் நோன்பு விழாவிலும் முதலமைச்சர் பழனிசாமியும், அவரது ஆதரவு அமைச்சர்களும் கலந்து கொள்ளவில்லை. இதேபோல் மாற்றுக்கட்சியினர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்வு முதலமைச்சர் இல்லத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் ஒன்றில் கூட கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டவில்லை.

மகனை மத்திய அமைச்சராக்க ஓபிஎஸ் போட்ட திட்டத்திற்கு வைத்திலிங்கத்தை வைத்து எடப்பாடி செக் வைத்ததே, உட்கட்சி பூசலின் உச்சகட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் டெல்லி 'மேலிடம்' வரை சென்றதையடுத்து, இருவரில் யாரை அமைச்சராக்கலாம் என தெளிவாக முடிவெடுத்து வாருங்கள் என்று டெல்லி தலைமை அறிவுரை வழங்கியிருப்பதாக அப்போதே செய்திகள் வெளியாகின.

புதிய மாற்றங்கள் வருமா?

தலைமை செயலகத்தில் நடந்த பிளாஸ்டிக் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திலும் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை. நிலைமை இவ்வாறு இருக்கையில் ஈபிஎஸ், தனது ஆதரவாளர்களான வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்களுடன் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளார். இந்நிகழ்வில் ஓபிஎஸ் பங்கேற்காதது குறித்து விசாரித்தபோது, அவர் சிகிச்சைக்காக கோவை சென்றிருப்பதாக கூறியிருந்தனர். இந்நிலையில், ஓபிஎஸ் தற்போது டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்து சில கோரிக்கைகளை வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறாக இருவருக்கு இடையேயும் நடந்து வரும் பனிப்போர், நாளுக்கு நாள் முற்றி வருகிறது. இது எந்த அளவுக்கு கட்சியை பாதிக்கும் என்பது போகபோகத்தான் தெரியவரும்.

Intro:Body:சென்னை // வி.டி. விஜய் // சிறப்பு செய்தி

பயணங்கள் முடிவதில்லை

மாறிமாறி டெல்லி பறக்கும் ஓபிஎஸ் - இபிஎஸ்

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சினை எழுந்தபோது மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி தாங்கள் இருவரும் ஒற்றுமையாகத் தான் இருக்கிறோம் என்று கட்சியினருக்கு ஓபிஎஸ் இபிஎஸ் கூறியிருந்தனர். ஆனால் அதிமுகவில் நடந்துவரும் உட்கட்சிப் பூசல்கள் ஓபிஎஸ் இபிஎஸ் இடையே நடக்கும் பனிப்போரை நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன.

முதல்வர் பழனிசாமி கடந்த வாரம் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினார். இந்நிலையில் மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள நாளை துணை முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லி செல்ல உள்ளார். அங்கு மத்திய அமைச்சர்களை சந்திக்க நேரம் கேட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் டெல்லி சென்று அமைச்சர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி ஒற்றை தலைமை பிரச்சனை வரும் போது தமக்கு கட்சி ரீதியாகவும் மத்திய அரசு என்ற வகையிலும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் கூறப்படுகிறது. இந்நிலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் டில்லியில் மத்திய அமைச்சர்களை சந்திக்க நேரம் கேட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

அதிமுக இருபெரும் தலைமைகளாக செயல்பட்டு வரும் பழனிசாமி, பன்னீர்செல்வத்திற்கு இடையில் பனிப்போர் நடந்து வருகிறது. ஏற்கனவே பன்னீர்செல்வம் அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டு பழனிச்சாமியின் கைகள் ஓங்கியது. அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்களும் தங்களுக்கு சரியான மரியாதை இல்லை அவரிடம் முறையிட்டு வந்தனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து அதிமுக படுதோல்வி அடைந்தது மத்தியில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு டில்லி சென்ற ஓபிஎஸ் இபிஎஸ் தமிழகம் திரும்பி இருவரும் ஒரு நிகழ்வில் கூட சேர்ந்து பங்கேற்கவில்லை.

துணை முதல்வர் பன்னீர்செல்வம் தனது மகனும் அதிமுக தரப்பில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு எம்பி ரவீந்திர நாத் குமார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. இபிஎஸ் தரப்பு அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி ஆகியோர் பங்கேற்கவில்லை. ஜெயலலிதா நினைவிடம் இன்றும் அதிமுக தொண்டர்களால் முக்கியமாக பார்க்கப்பட்டு வருகிறது. முக்கியமான இந்த நிகழ்வில் முதல்வர் பங்கேற்காதது தொண்டர்களுக்கு வருத்தத்தை அளித்தது.

காயிதே மில்லத் பிறந்த நாளுக்கு அவரது நினைவிடத்தில் துணை முதல்வர் மட்டுமே மரியாதை செலுத்தினார். முதல்வர் கலந்து கொள்ளவில்லை.
அதிமுக சார்பில் நடந்த இப்தார் நோன்பு விழாவில் முதல்வர் பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை.

இதேபோல் மாற்றுக்கட்சியினர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்வு முதல்வர் இல்லத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் ஒன்றில் கூட கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டதில்லை.

இதெற்கெல்லாம் முத்தாய்ப்பாய் நடந்த சம்பவம்தான் மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பிடிக்க நடந்த உள்கட்சி பூசல்கள். அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமாரை மத்திய அமைச்சர் ஆக்கலாம் என்று பன்னீர்செல்வம் திட்டமிட்டு காய் நகர்த்தி வந்தார். ஆனால் அதற்கு செக் வைக்கும் விதமாக மூத்த எம்பி வைத்திலிங்கத்தை மத்திய அமைச்சராக பழனிச்சாமி திட்டமிட்ட கட்சியினரிடம் கையெழுத்து வாங்கினார். ஆனால் ஓபிஎஸ் மட்டும் அதில் கையெழுத்திடவில்லை என்று தெரிகிறது. இந்த பிரச்சினை டெல்லி வரை நீடித்து, இருவரில் யாரை அமைச்சராக்கலாம் என தெளிவாக முடிவெடுத்து வாருங்கள் என்று டெல்லி 'மேலிடம்' தெளிவாக கூறி அனுப்பி விட்டது. பிரதமர் பதவியேற்பு முடிந்தும் முதல்வர் தமிழகம் திரும்பிய நிலையில் டெல்லியிலே முகாமிட்டு பாஜ தலைவர்களை ஓபிஎஸ் சந்தித்தது தனிக்கதை.

தலைமை செயலகத்தில் நடந்த பிளாஸ்டிக் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திலும் துணை முதல்வர் பங்கேற்கவில்லை. நிலைமை இவ்வாறு இருக்கையில் இன்று முதல்வரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிச்சாமி தனது ஆதரவாளர்களான வேலுமணி விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்களுடன் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளார். இந்நிகழ்வில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பில் விசாரித்தபோது துணை முதல்வர் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் சென்றிருப்பதாக கூறி இருந்தனர்.

இந்நிலையில் தற்போது துணை முதல்வர் டில்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்து சில கோரிக்கைகளை வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறாக பன்னீர்செல்வம் பழனிசாமி இடையே நடந்து வரும் பனிப்போர் ஆனது நாளுக்கு நாள் முற்றி வருகிறது. இது எந்த அளவுக்கு கட்சியை பாதிக்கும் என்பது போகப்போகத்தான் தெரியவரும். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.