தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றிவந்தவர் பிரசன்னா. இவர் தனது மனைவி, தாய் ஆகியோருடன் தாம்பரம் அடுத்த சேலையூரில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று குளிர்பதனப் பெட்டி வெடித்ததில் மூன்று பேரும் உயிரிழந்தனர்.
இதையடுத்து, அவரின் குடும்பத்திற்கு மூன்று லட்ச ரூபாய் உதவித்தொகை வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரது குடும்பத்திற்கு இரங்கலையும், அனுமானத்தையும் தெரிவித்துக்கொள்வதாகவும் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.