திருச்சியைச் சேர்ந்த ரியாஸ் அகமது தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழ்நாடு அரசு சார்பில் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 16 முதல் ஜூலை 15ஆம் தேதி வரை 29 நாட்கள் மாங்கனித்திருவிழா கண்காட்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு வருடா வருடம் தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் கண்காட்சி என்ற பெயரில் அரசு நிகழ்ச்சி நடத்தப்படுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
நீட் தேர்வு தோல்வியால் மாணவர்கள் உயரிழந்து வரும் நிலையில், பள்ளிக்கூடங்களில் நடத்தப்படும் இதுபோன்ற கண்காட்சியால் மாணவர்களால் கல்வியில் கவனம் செலுத்த முடியவில்லை. பள்ளிக்கூட வளாகங்களில் எந்த அரசு நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என உயர் நீதிமன்றம் பல தீர்ப்புகளில் உத்தரவிட்டுள்ளது. அதனால் தமிழ்நாடு முழுவதும் அரசு நிகழ்ச்சியை பள்ளிக்கூடங்களில் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு பள்ளிக்கூட மைதானம் என தெரிந்தும் மாங்கனித்திருவிழா கண்காட்சிக்கு அனுமதி வழங்கியது யார்? என பள்ளிக்கல்வித்திறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.