அதிமுக தலைமையகத்தில் ஒன்றரை மணி நேரமாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது. இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் 12 மணிக்கு நிறைவடைந்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முக்கிய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அடைந்த தோல்விக்குப் பின்னர் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல் ஒற்றைத் தலைமை சர்ச்சை, பொதுச்செயலாளராக யாரும் தேர்வு செய்யப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருந்தது.
மேலும் இந்தக் கூட்டத்தில் ‘அடுத்ததாக நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது’. மேலும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுதாக தகவல் வெளியாகியுள்ளன.