சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் ஜெகதீஸ்குமார், திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் லோகரங்கன் ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் திறந்த வேனில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதில் சில;
- இந்த ஊர் சரித்திரத்தில் இடம் பெற்ற ஊர். அதில் நாங்களும் பங்கு பெற்றுள்ளோம் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.
- எங்களுக்கு ஏன் ஓட்டுப் போடவேண்டும் என மக்கள் கேட்கிறார்கள், மற்ற யாரிடமும் இல்லாத ஒன்று எங்களிடமே உள்ளது, அதுதான் நேர்மை.
- ஆட்சியில் உள்ளவர்கள் பேரன், பேத்திகளுக்குச் சொத்து சேர்க்கிறார்கள்.
- இந்த தேர்தல் புரட்சியில் பங்கு எடுத்துக் கொண்டால் நீங்களும் புரட்சி திலகம் ஆகலாம்.
- விடுமுறை நாட்கள் போலத் தேர்தல் வர உள்ளதால் மக்கள் யாரும் விடுமுறை எனச் சென்று விடாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு பேசிய கமல், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இதையும் கோயிலாக நினைத்து ஓட்டுப் போடுங்கள் என்று நிறைவு செய்தார்.