முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்
அனைத்து கட்சிக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டது. இந்த மசோதாவினை பாஜக, காங்கிரஸ், புதிய தமிழகம், தமாகா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 7 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கட்சித் தலைவர்களின் கருத்துகள் பின்வருமாறு:
தமிழிசை, பாஜக:
10 சதவீதம் இட ஒதுக்கீடு உயர் சாதியினருக்கு என்று கருதி சமூக நீதிக்கு எதிரானது என்று கண்மூடித்தனமாக எதிர்க்கக் கூடாது. இதன் மூலம் தமிழகத்திற்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்பதால் நாம் ஏன் மறுக்கவேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் 69% இட ஒதுக்கீட்டிற்கு எந்த இடையூறும் இல்லாமல் 10% இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தினால் ஏன் நாம் ஏற்கக் கூடாது.
கே.பாலகிருஷ்ணன், சிபிஎம்:
10% சதவீத இட ஒதுக்கீட்டை 5% உள்ள முன்னேறிய வகுப்பினருக்கு மட்டும் வழங்காமல் அனைத்து பிற்படுத்தப்பட்ட மற்றும் பின்தங்கிய வகுப்பினரின் எண்ணிக்கையைப் பொறுத்து வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும்.
கே.எஸ். அழகிரி, காங்கிரஸ்:
69% இட ஒதுக்கீட்டிற்குப் பாதிப்பு ஏற்படாமல் 10% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் வாசன் மற்றும் புதிய தமிழக கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி ஆகியோர், 10% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை வரவேற்பதாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
Intro:Body:
: *அனைத்து கட்சி கூட்டம்*
*தமிழிசை பேச்சு*
10 சதவீதம் இட ஒதுக்கீடு உயர் சதவிதனருக்கு என்று கருதிவிடக்கூடாது
சமூக நீதிக்கு எதிரானது என்று கண்முடி தனமாக சொல்ல கூடாது
தமிழகத்திற்கு அதிக இடங்கள் கிடைக்கும்
நாம் ஏன் மறுக்கவேண்டும்
இன்றைய காலகட்டத்தில் 69 இட ஒதுக்கீட்டில் பங்கம் வராமல் 10 சதவீதம் செயல்படுத்தினால் ஏன் நாம் ஏற்க கூடாது
ஏற்றத்திற்கான திட்டமே தவிர ஏமாற்றத்திற்கான சட்டம் இல்லை
பங்கம் வரவில்லை என்று அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும்
[7/8, 7:52 PM] VT Vijay: தமிழக அரசின் சார்பில் நடைபெறும்
அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டம்
தலைமைச் செயலகம், சென்னை - 8.7.2019
பொருளாதாரத்தில் நலிவுற்ற இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்த அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கீழ்க்கண்ட கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறோம்.
1. சமூகத்தில் நிலவுகிற பொருளாதார, சாதிய ஏற்றத்தாழ்வுகளை போக்கி சமத்துவ வாழ்வை உருவாக்க வேண்டுமென்ற லட்சியத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு முக்கிய அம்சமாக சமூக நீதி கோட்பாடு கருதப்பட வேண்டும். ஆனால், இச்சமூக நீதி கோட்பாடு பொதுவாக இடஒதுக்கீடு என்ற வகையில் மட்டும் சுருக்கப்பட்டு விடுகிறது. மண்டல் கமிஷன் குறிப்பிட்டுள்ளதைப் போல இடஒதுக்கீடு என்பதோடு நிலமற்றவர்களுக்கு நிலவிநியோகம், பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவற்றையும் நிறைவேற்றுவதன் மூலமே முழுமையான சமூக நீதியை நிலைநாட்ட இயலும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
2. அமலாக்கப்பட்டு வரும் உலகமய, தாராளமயக் கொள்கைகளின் காரணமாக அரசு வேலை வாய்ப்புகள் சுருங்குவதும், காலியிடங்கள் நிரப்பப்படாமல் நீடிப்பதும், தனியார்மயம் அதிகரிப்பதினாலும் இடஒதுக்கீடு கோட்பாடு என்பது பெரும் கேள்விக்குறியாக மாறி வருகிறது. எனவே, காலியிடங்களை நிரப்புவது, அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது, தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை அமலாக்குவது, பொதுத்துறையை பாதுகாப்பது உள்ளிட்டவை சமூக நீதிக்கான போராட்டத்தின் பிரிக்க முடியாத அங்கம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதேபோல மதம் மாறிய தலித் கிறித்துவர்களுக்கு தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதையும் வற்புறுத்த விரும்புகிறோம்.
3. மருத்துவ கல்வி இடங்களில் 15 சதவிகித இடங்கள் அகில இந்திய கோட்டாவிற்கு ஒதுக்கப்படுகிறது. ஆனால், இதில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டை மத்திய அரசு அமலாக்க மறுப்பது சட்ட விரோதமானதாகும். எனவே, மேற்கண்ட அகில இந்திய கோட்டாவில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை மத்திய அரசு கட்டாயம் அமலாக்க வேண்டும் என்பதை தமிழக அரசு வற்புறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
4. பொருளாதாரத்தில் நலிந்த இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சம் 10 சதமானம் வரை இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தினை மத்திய அரசு (124-வது சட்டத்திருத்தம்) நிறைவேற்றியது. இச்சட்டத்திருத்தத்தினை நாடாளுமன்றத்தில் ஆதரித்த அதே நேரத்தில், இதனை நிறைவேற்றுவதற்கு முன் அனைத்துக் கட்சிகளோடு கலந்து பேசி கருத்தொற்றுமையோடு நிறைவேற்றுவதற்கு மாறாக அவசர கதியில் அரசியல் ஆதாய நோக்கோடு மத்திய பாஜக அரசு நிறைவேற்றியதை நாடாளுமன்றத்தில் இம்மசோதா விவாதத்திற்கு வந்த போதே எங்கள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டியுள்ளோம்.
5. இச்சட்டத்திருத்தத்தையொட்டி தீர்மானிக்கப்பட்டுள்ள ரூ. 8 லட்சம் உள்ளிட்ட பொருளாதார வரம்பு என்பது நலிந்தோருக்கான வரம்பாக இருக்க முடியாது. இப்பொருளாதார வரம்பை தமிழகத்தில் குறைத்திட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
6. பொருளாதாரத்தில் நலிந்த இதர பிரிவினருக்கு இடஒதுக்கீட்டினை அமலாக்கும் போது ஏற்கனவே தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவிகித இட ஒதுக்கீட்டு கோட்பாட்டிற்கு எந்த வகையிலும் குந்தகம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறோம்.
7. அரசமைப்பு சட்டப்பிரிவுகள் 15 மற்றும் 16க்கு மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தின் படி பொருளாதாரத்தில் நலிவுற்ற இட ஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சம் 10 சதவிகிதம் வரை (ளுரதெநஉவ வடி ய அயஒiஅரஅ டிக 10 யீநசஉநவே) இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இப்பிரிவினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென கட்டாயப்படுத்தவில்லை. எனவே, தமிழகத்தில் இப்பிரிவினருக்கு 10 சதவிகித அளவிற்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டிய சட்ட ரீதியான நிர்ப்பந்தம் ஏதுமில்லை என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
8. தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் அதிகாரப்பூர்வமற்ற தகவலின் படி ஏறக்குறைய 95 சதமான மக்கள் இடஒதுக்கீட்டு வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சுமார் 5 சதவிகித மக்கள் மட்டுமே இடஒதுக்கீடு வரம்பிற்குள் கொண்டு வரப்படவில்லை என விபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு 10 சதமான இடஒதுக்கீடு என்பது அதீத ஒதுக்கீடாக அமைந்து விடும். எனவே, இதுவரை இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினரின் மக்கள் தொகையினை கணக்கீடு செய்ய வேண்டும். அம்மக்கள் தொகை எத்தனை சதமானம் என கணக்கிட்டு அதில் சரிபாதி சதமான அளவு இப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கி தமிழகத்தில் அமல்படுத்தப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
9. பொதுவாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பின்தங்கிய மக்களுக்கும் அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ற அளவு இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை இதுவரை இல்லை என்பதை கணக்கில் கொள்ள வேண்டும். இதே அடிப்படையில் பொருளாதாரத்தில் நலிவுற்ற, இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கும் இடஒதுக்கீட்டு விகிதத்தை கணக்கிட்டு அமலாக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
10. தமிழ்நாட்டில் அமலில் உள்ள 69 சதமான இடஒதுக்கீட்டிற்கு எவ்வகையிலும் பாதிப்பில்லாமல் கூடுதல் மருத்துவ இடங்களைப் பெற்று மேலே குறிப்பிட்டுள்ள விகிதப்படி பொருளாதாரத்தில் நலிவுற்ற இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீட்டினை செயல்படுத்தலாம் என தெரிவித்துக் கொள்கிறோம்.
- கே. பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்
--
--
Conclusion: