அரியலூர் சந்தைபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் ஓய்வுபெற்ற பேருந்து ஓட்டுநர். இவருடைய மகள் பூஜா என்கின்ற தேன்மொழி. இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
கோவையில் உள்ள தனியார் மில்லில் பணியாற்றி வந்த பூஜா, கடந்த இரண்டு மாதங்களாக சென்னை வேளச்சேரியில் உள்ள வணிக வளாகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் உடல் நிலை சரியில்லாமல் காணப்பட்ட பூஜா, சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கரோனா இருப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து பூஜாவின் தந்தை, தாய், அண்ணன், தம்பி உள்ளிட்ட குடும்பத்தினர் 14 பேரை மருத்துவக் குழுவினர் அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். இச்சம்பவம் அரியலூர் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கரோனோ அறிகுறி: பெண் தப்பி ஓட்டம்