அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ரத்னா ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஆய்வு செய்தனர்.
முன்னதாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டு பூட்டுகள் திறக்கப்பட்டன. அறையின் உள்ளே ஏதேனும் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளதா அல்லது டேமேஜ் ஆகி உள்ளதா என்பது ஆய்வு செய்யப்பட்டு, கட்சி பிரதிநிதிகளிடம் கையொப்பம் பெறப்பட்டது. இதன்பின்னர், வாக்குப்பதிவு இயந்திரம் இருக்கும் அறைக்கு மீண்டும் சீல் வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: தென்மாவட்டங்கள், கேரளாவுக்கு மேலும் 7 சிறப்பு ரயில்கள் : தென்னக ரயில்வே அறிவிப்பு!