அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கொங்குநாட்டார் குப்பம் கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட நாகை ஏரி உள்ளது. இதில் ஏழு ஏக்கர் நிலத்தை நில மேம்பாடு திட்டத்தில் நிலம் கொடுத்ததாகவும், ஆனால் அந்த திட்டத்தில் பட்டா தரவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த கிராமத்தில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இந்த ஏரி முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் குட்டை நிரம்பி வருகிறது. இந்த ஏரியை நம்பி விவசாயிகள் பயிர் சாகுபடி செய்யதுள்ளனர். ஏரியை மீட்டு கொடுக்க கோரி சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில் இதனைக் கண்டித்து கிராம மக்கள் ஏரி ஆக்கிரமிப்பு பகுதிக்கு மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏரி இருந்தும் தங்களுக்கு பயன்படாததால் அதற்கு மாலை அணிவித்து மூடுவிழா கண்டதாக மக்கள் கூறினர்.
இதையும் படிங்க: வலசகல்பட்டி ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றம்: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!