ETV Bharat / state

சுரங்க பாலத்தை கட்டித்தரக் கோரி கிராம மக்கள் மனு! - சுரங்கபாலத்தை கட்டித்தரக் கோரி கிராம் மக்கள் மனு

அரியலூர்: கிராம சாலையை மறித்து தேசிய நெடுஞ்சாலை போடப்படுவதைக் கண்டித்தும் கிராமத்திற்குச் செல்லும் வகையில் சுரங்க பாலம் கட்டித்தர வலியுறுத்தியும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Villagers
Villagers
author img

By

Published : Oct 27, 2020, 9:58 PM IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூசையப்பர் பட்டினம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன.

இந்நிலையில், சிதம்பரம் முதல் திருச்சி வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்றுவரும் நிலையில், அக்கிராமத்திற்குச் செல்லக்கூடிய சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு கிலோமீட்டர் சுற்றி வரக்கூடிய நிலை இருப்பதால் நோயாளிகள், பள்ளிக் குழந்தைகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, கிராமத்திற்குச் செல்லும் வகையில் சுரங்க பாலத்தை கட்டித்தர வேண்டும் எனக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.