ETV Bharat / state

விஜயதசமியில் களைகட்டிய வித்யாரம்பம் நிகழ்ச்சி! - விஜயதசமி செய்திகள்

அரியலூர்: விஜயதசமியை முன்னிட்டு நெல்லை, நாகை, தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

vijayadasamy
author img

By

Published : Oct 9, 2019, 9:33 AM IST

நாடு முழுவதும் நேற்று விஜயதசமி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்நாளில் குழந்தைகள் கல்வி கற்கத் தொடங்கினால், அவர்களின் எதிர்காலம் சிறக்கும் என்பது பெற்றோரின் கருத்து. குறிப்பாக விஜயதசமியன்று குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதும், அவர்களுக்கு வித்யாரம்பம் செய்வதும் வழக்கம்.

அதன்படி, அரியலூரில் விஜயதசமியை முன்னிட்டு பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிகளில் ஆர்வமுடன் சேர்த்தனர். பள்ளிகளிலும் முதல் நாள் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு, வித்யாரம்பம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு நெல்மணிகளில் அ, ஆ உள்ளிட்ட எழுத்துக்களை எழுத கற்றுத்தரப்பட்டன.

இதேபோல் நெல்லையில் உள்ள சரஸ்வதி கோயில், நெல்லையப்பர் கோயில், தனியார் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெற்றோர் பங்கேற்றுத் தங்களது குழந்தைகளை கலந்துகொள்ளச் செய்தனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலுள்ள ஸ்ரீ குருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் பள்ளியில், வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பெற்றோர் கலந்துகொண்டு தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்த்தும், நெல்மணியில் தமிழ் எழுத்துக்களை எழுதச் செய்தும் சிறப்பித்தனர்.

தஞ்சாவூர், கும்பகோணத்தில் உள்ள ஏராளமான தனியார் பள்ளிகளில் விஜயதசமியையொட்டி குழந்தைகளுக்கு நவதானியங்களில் தமிழ் எழுத்துக்கள் எழுத கற்றுத்தரப்பட்டன. மேலும், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு அதிகளவில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

களைகட்டிய வித்யாரம்பம் நிகழ்ச்சி

இதையும் படிங்க:

விஜயதசமி பண்டிகை: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து

Intro:நெல்லையில் சரஸ்வதி கோயில் மற்றும் நெல்லையப்பர் கோயிலில் தனியார் பள்ளியில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் திரளான பெற்றோர்கள் பங்கேற்றனர். Body:நெல்லையில் சரஸ்வதி கோயில் மற்றும் நெல்லையப்பர் கோயிலில் தனியார் பள்ளியில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் திரளான பெற்றோர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்திலேயே சரஸ்வதிக்கு என தனியாக உள்ள கோயில் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலுக்கு எதிர்புறம் அமைந்துள்ளது. பழமையான இந்த கோயிலை தனியார் நிர்வகித்து வருகின்றனர். கல்விக்கு உகந்த நாளான விஜயதசமி நாளில், சிறார்களுக்கு ஆரம்பக்கல்வியின் பாலபாடத்தை கற்பித்தல் சிறப்பானதாகும். சரஸ்வதி கோயிலில் வித்யாரம்பம் எனப்படும் குழந்தைகளுக்கு கல்வியை கற்பித்தல் பணியை துவக்கினர்.

இதற்காக அரிசியில் குழந்தைகளின் விரல் பிடித்தும், மஞ்சள் துண்டு மூலமும் "அ..ஆ.." என தமிழின் முதல்எழுத்துக்கள் கற்றுத்தரப்பட்டன. இதேபோல திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆறுமுகநயினார் சன்னதியில் நடந்த நிகழ்ச்சியிலும் குழந்தைகளுக்கு பாலபாடம் கற்றுத்தரும் நிகழ்வு நடந்தது. இதில் திரளான பெற்றனர்.

சரஸ்வதி பூஜையின் 10வது நாளான இன்று குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது சிறப்பாகும். இதனால் சரஸ்வதியின் அருள் குழந்தைகளுக்கு கிடைக்கும் என்றும் மழலையர்கள் பெற்றோர்கள் தங்கள் மடியில் வைத்து நெல்லில் எழுதச்செய்தனர்.

மேலும் ஓர் தனியார் பள்ளியில் முதல்வர் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் முன்னிலையில் 140 குழந்தைகள் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் ஏராளான குழந்தைகள் ஆர்வமுடன் தங்களது கல்வியை தொடங்கினர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.