அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ரத்னாவிடம் அரியலூர் மாவட்ட விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
![மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த விஜய் ரசிகர்கள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pbl-02-vijay-fans-colletcer-manu-script-image-script-image-tn10037_12012021171714_1201f_1610452034_446.jpg)
அந்த மனுவில் அவர்கள், "பொங்கல் பண்டிகையையொட்டி விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் நாளை ஜனவரி 13ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வெளியாகிறது. இந்தப் படம் அரியலூரில் உள்ள திரையரங்கிலும் திரையிடப்படுகிறது. இப்படத்துக்கான டிக்கெட் கடந்த இரண்டு நாட்களாக இணையதளம் மற்றும் திரையரங்க கவுன்ட்டரிலும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இந்த டிக்கெட்டுகளை இடைத்தரகர்கள் மூலம் கூடுதல் விலைக்கு திரையரங்க நிர்வாகம் விற்பனை செய்துவருகிறது. எனவே, திரையரங்க உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.