அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ஆபத்து காத்த விநாயகர் கோயிலில் காலை, மாலை என இருமுறை பூஜை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் கோயில் பூசாரி நேற்று காலை கோயிலை திறந்து பார்த்தபோது கோயில் உண்டியல் தகரம் கிழிக்கப்பட்டு, உள்ளேயிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கோயில் பூசாரி மற்றும் அருகிலுள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கோயிலில் இருந்த சிசிடிவி காட்சியை அடிப்படையாக கொண்டு குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:சொந்த தந்தையையே ஏமாற்றிய ஒற்றாடல் பட இயக்குநர்: வாடகை வீட்டில் வசிக்கும் தந்தை