ETV Bharat / state

மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

top ten news at 1 pm  top ten news  top ten  top news  latest news  tamil nadu news  tamil nadu latest news  news update  today news  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  செய்திச் சுருக்கம்  அண்மை செய்திகள்  மதியம் செய்திகள்
செய்திச் சுருக்கம்
author img

By

Published : Nov 5, 2021, 12:36 PM IST

1. முல்லை பெரியாறு அணையில் நேரில் ஆய்வு - துரைமுருகன்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகள் மற்றும் அணைக்கட்டுகளில் நிலை குறித்தும் நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளதாக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

2. விதியை மீறி பட்டாசு வெடிப்பு: 2282 வழக்குகள் பதிவு

தமிழ்நாட்டில் தீபாவளி அன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 2282 வழக்குகள் பதிவாகியுள்ளது. மேலும் 517 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

3. 50 ஆண்டுகளுக்கு மேல் தீபாவளி கொண்டாட்டம் இல்லாத கிராமங்கள்

வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக தீபாவளி கொண்டாட்டம் இல்லாமல் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி வியப்பில் ஆழ்த்தும் 13 கிராமங்கள் குறித்து இத்தொகுப்பில் காணலாம்.

4. துவி பாத சிரசாசனத்தை 27 நிமிடங்கள் செய்த பள்ளி மாணவி சாதனை

திருவள்ளூரில் துவி பாத சிரசாசனம் என்னும் யோகாசனத்தை 27 நிமிடங்கள் செய்த கும்முடிபூண்டிச் சேர்ந்த பள்ளி மாணவி உலக சாதனை படைத்துள்ளார்.

5. 10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய சதுப்பேரி - ஊருக்குள் புகுந்த வெள்ளநீர்

வேலூரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய சதுப்பேரியில், தூர்வாராத காரணத்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் நீர் புகுந்துள்ளது.

6. Drunk and Drive - சென்னையில் 3 மாதங்களில் 11,077 வழக்குகள் பதிவு

சென்னையில் கடந்த 3 மாதங்களில் குடிபோதையில் வாகனத்தை இயக்கியதாக சுமார் 11 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

7. மயிலாடுதுறையில் ஜேசிபி ஆப்ரேட்டர் ஓட ஓட விரட்டிக்கொலை

மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக ஜேசிபி ஆப்ரேட்டரை ஓட ஓட விரட்டிச் சென்று கத்தியால் குத்தி கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

8. “முதலமைச்சர் வழங்கியிருப்பது பட்டா அல்ல, நம்பிக்கை” - நடிகர் சூர்யா

நரிக்குறவர், இருளர் சமூக மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

9. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் - போட்டியில் இருந்து வெளியேறியது மேற்கிந்திய தீவுகள்

டி20 உலகக்கோப்பை போட்டியில் இலங்கையிடம் தோல்வி அடைந்த நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி போட்டியில் இருந்து வெளியேறியது.

10. மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ ஓய்வு!

மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக வலம் வந்த டுவைன் பிராவோ, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.