சென்னை : தங்கம், வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று (அக்.23) தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்து 36 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 28 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 515 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியை பொருத்தவரை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து 69 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனையாகிறது.