தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ் அரியலூரில் செய்தியாலர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியினர் சிறுபான்மையினரை ஓட்டுக்களை பெற இந்து மதத்தை கொச்சைப்படுத்தி வாக்குகள் வாங்க முயற்சி செய்கின்றனர்.
கமல்ஹாசன் சினிமாவில் பேசுவதைப் போலவே நிஜ வாழ்க்கையிலும் பேசிவருகின்றார். அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
கோட்சே காந்தியை கொன்றது யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. மன்னிக்கவும் முடியாது அதற்கு மாற்று கருத்து இல்லை. அதற்காக இந்து மதத்தை அதனுடன் தொடர்புபடுத்தி பேசுவது கண்டிக்கத்தக்கது. எனவே அவரது பேச்சை அவர் திரும்ப பெற வேண்டும்.
கமல்ஹாசன் தன்னை எம்ஜிஆர் என மனதில் நினைத்துக்கொண்டு பொய்யான தகவல்களின் மூலம் மக்களை பிளவுபடுத்துகின்றார்.
இந்த விவகாரத்தில் அவர் உடனடியாக பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இந்து மதத்தை அவர் கொச்சைப்படுத்துவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எந்த ஒரு மதத்துக்கும் தீவிரவாதி என்ற சாயத்தை பூச வேண்டாம்.
தமிழக அரசு சட்டரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.