உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா தீநுண்மி (வைரஸ்) தொற்றுத் தாக்கத்திலிருந்து தப்பிக்க தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், வெளியே வரும்போது முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்திவருகின்றன.
இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் சில இடங்களில் அஜாக்கிரதையாக பொதுமக்கள் வெளியே வருகின்றனர். இவர்களைப் பலமுறை காவல் துறையினர் எச்சரித்துவருகின்றனர்.
இந்நிலையில் அரியலூர் நகராட்சி சார்பில் நகராட்சி ஆணையர் அரியலூர் நகர சாலையில் முகக்கவசம் அணிவதற்கான அவசியத்தை எடுத்துக் கூறினார்.
அதேசமயம் முகக்கவசம் அணிந்து வராதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசனும் இதன் அவசியத்தை எடுத்துக் கூறினார்.