தமிழ்நாட்டில் கடந்த இரு தினங்களாக பல்வேறு பகுதிகளில் தொடர்மழை பெய்துவருகிறது. குறிப்பாக அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்த தொடர் மழையால் திருமானூர் அருகே உள்ள தூத்தூர் கிராமத்தில் மயானத்திற்குச் செல்லும் பாதையிலுள்ள பொன்னாற்று பாசன வாய்க்கால் மீது கட்டப்பட்டிருந்த பாலம் சேதமடைந்துள்ளது.
1925ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலத்தின் பக்கவாட்டு தடுப்புச்சுவர் மற்றும் பாலத்தின் ஒரு பாகம் சேதமடைந்துள்ளது. இதனை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் பார்வையிட்டார்.
பின்னர் பேசிய அவர், சேதமடைந்த இந்த பாலத்திற்கு பதிலாக அதே இடத்தில் ரூ. 55 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்படும் என்றார்.
இதையும் படிங்க: வேளாண் ஒப்பந்தச் சட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு!