அரியலுார் மாவட்டத்தில் தமிழ் பண்பாட்டுப் பேரவை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு இடையே, தமிழ் மொழியை வளர்க்கும் விதமாக, திருக்குறள், தொல்காப்பியம் பற்றிய வகுப்புகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழாசிரியர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு, தாய்மொழியின் அவசியத்தை மாணவர்கள் எடுத்துரைத்தனர்.
60க்கும் மேற்பட்டோர் திருக்குறள், தொல் காப்பிய வகுப்பில் சேர்ந்துள்ள நிலையில், ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை இவ்வகுப்புகள் நடைபெறும் என தெரிவித்தனர்.
இதையும் படிக்க: கரூரில் அரசுத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்