இந்தியா முழுவதும் பரவிவரும் கோவிட்-19 வைரஸ் தொற்று காய்ச்சலினால் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தன. ஊரடங்கு காலத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க கோயில்கள் மூடப்பட்டன.
அதன்பின்னர் பல்வேறு தளர்வுகளின்போது கிராமக் கோயில்கள் பத்தாயிரம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் உள்ள கோயில்கள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு இன்று (செப்.1) முதல் அனைத்து கோயில்களிலும் திறக்கலாம் என அறிவித்ததை அடுத்து அரியலூர் மாவட்டத்தில் 10,000 ரூபாய்க்கு மேல் வருமானம் வரக்கூடிய கோயில்களான திருமழபாடி வைத்தியநாதர் கோயில், கோதண்டராமசாமி கோயில், கள்ளக்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட கோயில்கள் இன்று திறக்கப்பட்டன.
கோயில்களில் அர்ச்சகர்களும் பக்தர்களும் முகக்கவசம் அணிந்து கோயிலுக்கு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரசாதங்கள் எதுவும் வழங்கப்படமாட்டாது எனவும் திருநீறு குங்குமம் ஆகியவற்றை பக்தர்களே எத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்ப்பட்டுள்ளது. கோயில்கள் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: காதலனால் கைவிடப்பட்ட பெண் குழந்தையின் முன்பே தீக்குளித்து தற்கொலை!