அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் கிராமத்தில் பிரசித்திபெற்ற முனியப்பர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் எட்டு மாதங்களுக்கு முன்பு உண்டியலை உடைத்து பணம், காணிக்கை உள்ளிட்ட பொருட்களை திருடர்கள் திருடிச் சென்றனர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் கோயிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றனர். இது குறித்து செந்துறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
அதேபோல் அரியலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரத்தில் ஜெயங்கொண்டம் பகுதியில் ஆறு இடங்களிலும் தா.பழூரில் மூன்று கடைகளிலும் செந்துறை பகுதியிலும் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இந்தத் தொடர் திருட்டால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.