கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அமைந்துள்ள அப்போலோ மருந்துக் கடையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை எனவும் மருந்துக் கடையில் வேலை பார்ப்பவர்கள் முகக்கவசமின்றி பொதுமக்களுக்கு மருந்துகளை அளிப்பதாகவும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியருக்கு கடையை சீல் வைக்க உத்தரவிட்டார். உடனடியாக விரைந்த வட்டாட்சியர் மருந்துக் கடைக்கு சீல் வைத்தார்.
இதையும் படிங்க: வெட்டப்படாமல் பழுத்து வீணாகும் செவ்வாழைக் குலைகள்: விவசாயிகள் வேதனை!