கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால், கள்ள மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு சரக்குகள் கிடைத்து வந்தன. இந்நிலையில், அரியலுார் மாவட்டத்தில் உள்ள முன்று டாஸ்மாக் கடைகளை உடைத்து, சரக்குகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சிடைந்த டாஸ்மாக் உயர் அலுவலர்கள், சரக்குகளை லாரியில் ஏற்றி, தனியார் மண்டபத்தில் வைத்து பாதுகாத்து வந்துள்ளனர். இந்நிலையில் கீழப்பழுவரில் உள்ள தனியார் மண்டபத்தில் உள்ள 53 டாஸ்மாக் கடைகளின் சரக்குகளை ஆடிட்டர்கள் திடீரென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் விலை உயர்ந்த சரக்குகளின் எண்ணிக்கை சரியாக உள்ளதாகவும், குறைந்த விலையிலான சரக்குகளின் இருப்பு எண்ணிக்கையில் வித்தியாசம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி விற்பனை செய்யப்பட்டு கணக்கு காட்டப்பட்டதற்கும், தற்போது கையிருப்பிற்கும் அதிக வித்தியாசம் உள்ளதால் டாஸ்மாக் கடைகளின் விற்பனையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். மேலும் கள்ள சந்தையில் விற்று கிடைத்த சரக்கின் லாப பணத்தை டாஸ்மாக் விற்பனையாளர்களும், கள்ள சந்தையில் விற்றவர்களும் பங்கிட்டு கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க:பாதுகாப்பு கருதி மதுபானங்கள் அரசு குடோனுக்கு மாற்றம்