அரியலூர் மாவட்டம் செந்துறையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்திருந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "5,8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு, மாணவர்களின் இடைநிற்றலை அதிகப்படுத்தும். இத்தேர்வானது குலக்கல்விக்கு வழிவகுப்பதாக உள்ளது. தமிழ்நாடு அரசு இதனை ரத்து செய்யவேண்டும்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு குறித்து தமிழ்நாடு அரசு, உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை மேற்கொள்ளவேண்டும். முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்து முழுமையாக நாட்டுடைமையாக்க வேண்டும். இதுபோன்ற தவறுகள் நடைபெறமால் தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கு மக்களின் அனுமதியைப் பெறவேண்டியதில்லை என மத்திய அரசு கூறியிருப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல். எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதற்குரிய நிலங்களைக் கையகப்படுத்தவதில் விவசாயிகளின் கருத்துகளைக் கேட்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: 5, 8 ஆம் வகுப்பு பொதுதேர்வுகள் மன அழுத்தை ஏற்படுத்தும் - கருணாஸ்.!