அரியலூர் மாவட்டத்தில், சிமென்ட் ஆலைகள், சாலைப் பணிகள், கட்டட வேலைகள் உள்ளிட்ட பணிகளுக்காக வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 800க்கும் மேற்பட்டவர்கள் வந்து தங்கியுள்ளனர். இவர்களில் பிகாரைச் சேர்ந்த 330 நபர்கள், தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல விருப்பம் தெரிவித்ததால், மாவட்ட நிர்வாகம் சார்பில் 14 வாகனங்களில் அரியலூரில் இருந்து விழுப்புரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் அவர்கள் தங்களது சொந்த மாநிலமான பிகாருக்கு செல்ல உள்ளனர். இவர்களை மாவட்ட ஆட்சியர் ரத்னா வழியனுப்பி வைத்தார். இவர்கள் பிகார் செல்வதற்காக ஆகும் ரயில் கட்டணமான 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை மாவட்ட நிர்வாகம் செலுத்தியுள்ளது.
அதேபோன்று நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் வந்து தங்கி உணவகங்கள், இனிப்பகங்கள் உள்ளிட்ட இடங்களிலும், போர்வை, கம்பளி ஆகியனவற்றை விற்பனை செய்தும் வசித்து வருகின்றனர்.
கரோனா பாதிப்பால் வேலையை இழந்து, வெளிமாநிலத் தொழிலாளர்கள் தவித்து வந்தனர். இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலத் தொழிலாளர்கள் தங்களை மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு - சொந்த மாநிலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட வடமாநிலத்தவர்கள்!