சென்னை: ஆயுதப்பூஜை பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் வரும் 12, 13 ஆகிய தேதிகளில் சென்னையில் பூந்தமல்லி, கோயம்பேடு, தாம்பரம் ஆகிய மூன்று பேருந்து நிலையங்களிலிருந்து மற்ற மாவட்டங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி, திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத் தவிர இதர ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
இதையும் படிங்க : தீபாவளி: அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்