அரியலூர் மாவட்டத்தில் தற்போது கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தீவிர நடவடிக்கை எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பொன்பரப்பி கிராமத்தில் பொதுமக்களிடம் கரோனா தொற்று வராமல் தடுக்க முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்றும்; தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்கவேண்டும் என்றும்; தேவையின்றி வெளியே வரக்கூடாது எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வலியுறுத்தினார்.
பின்னர் அக்கிராமத்தில் பொன்னி என்ற மூதாட்டி வாழ்வாதாரமின்றி சிரமப்படுவதை அறிந்த அவர் தேவையானப் பொருட்களை அந்த மூதாட்டிக்கு வழங்கினார்.