அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன் மகன் பொம்மன். தந்தையிடம் மகன் குடிக்கப்பணம் கேட்டு அடிக்கடி தகராறு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2017 டிசம்பர் மாதம் 30ஆம் தேதி அன்று மது அருந்திவிட்டு அவரது தந்தை சின்னையனிடம் மேலும் குடிக்கப்பணம் கேட்டு பொம்மன் தகராறில் ஈடுபட்டார். சின்னையன் தரமறுக்கவே, அவரை உருட்டுக்கட்டையால் பொம்மன் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சின்னையன் தஞ்சாவூரில் சிகிச்சைப் பெற்ற நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து கீழப்பழுவூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து பொம்மனைக் கைது செய்தனர். வழக்கு விசாரணை அரியலூாில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி குற்றவாளி பொம்மனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
பொம்மனுக்கு 25 ஆயிரம் அபராதத் தொகை கட்ட யாரும் இல்லாத காரணத்தினால் அவா் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிப்பார் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: கரூரில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ காமராஜ் மீது தாக்குதல்!