அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட இலைக்கடம்பூரைச் சேர்ந்த ஐந்து பேர், தொடர்ச்சியாகப் பல குற்றங்களில் ஈடுபட்ட குலமாணிக்கத்தைச் சேர்ந்த வினித், மதுபானங்களில் போதைப்பொருள் கலந்து விற்றுவந்த ஏலாக்குறிச்சியைச் சேர்ந்த சிவக்குமார் உள்ளிட்ட ஏழு நபர்களைக் காவல் துறையினர் கைதுசெய்தனர். காவல் துறையினர் இந்நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பிறகு திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் ரத்னா குற்றவாளிகள் ஏழு பேரையும் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து அரியலூர் காவல் துறையினர் திருச்சி மத்திய சிறைத் துறை அலுவலர்களிடம் ஏழு நபர்கள் மீதான குண்டர் சட்டத்தின் உத்தரவினை வழங்கினர். கடந்த ஒரு மாதத்திற்குள் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 38 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிறந்தநாள் கொண்டாட்டம்... விருந்தில் பங்கேற்ற 18 பேர் மீது வழக்கு!