ETV Bharat / state

'Rejected' சீல் குத்திய தாசில்தாருக்கு அபராதம்.. அரியலூரில் நடந்தது என்ன? - Rejected one word

பட்டா மாறுதல் கோரிய விண்ணப்பத்தை ‘Rejected' என்ற ஒற்றை வார்த்தையில் தள்ளுபடி செய்த தாசில்தார், மனுதாரருக்கு 5,000 ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அரியலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

’Rejected’ சீல் குத்தியதால் சிக்கிய தாசில்தார்.. அரியலூரில் நடந்தது என்ன?

author img

By

Published : Jan 25, 2023, 1:16 PM IST

அரியலூர்: செந்துறை வட்டம் நிண்ணியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியம்மாள். இவர் அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “எனது கணவர் தங்கவேல் காலமாகி விட்டதால், சொத்துக்களுக்கான பட்டாவை எனது பெயருக்கு மாற்றம் செய்து தர வேண்டும் என்று கடந்த 12.01.2012 அன்று செந்துறை தாசில்தாரிடம் விண்ணப்பம் செய்தேன்.

இதற்கான சேவை கட்டணமாக 50 ரூபாய் செலுத்தினேன். ஆனால் எனது பட்டா மாறுதல் கோரும் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல் 2017 வரை பலமுறை விண்ணப்பம் செய்தபோதும், எனது மனுக்கள் ஏற்கப்படவில்லை. சேவை கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு சேவை புரியாமல் இருந்ததால், சம்பந்தப்பட்ட தாசில்தார் எனக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். மேலும் எனது பெயருக்கு பட்டாவை மாற்றித் தர வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இவ்வழக்கு அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராம்ராஜ் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தாசில்தார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘தங்கவேல் பெயரிலான சொத்துக்கள் யாவும் அவரது பூர்வீக சொத்துக்கள். அந்த சொத்துக்கு மொத்தம் 11 பேர் வாரிசுதாரர்கள். ஆனால் தங்கவேலுவின் மனைவி, தன் பெயரில் தங்கவேல் உயிர் எழுதி வைத்துள்ளதால், எனது பெயரில் பட்டா வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவ்வாறு வழங்க இயலாது.

எனவே அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது” என தெரிவித்தனர். இதனையடுத்து ஆஜரான பழனியம்மாள் தரப்பினர், ‘விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்ட காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. விண்ணப்பத்தின் மீது rejected என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிவித்தால்தான், அவற்றை சரி செய்து கொள்ள இயலும்.

ஆனால் காரணமே தெரியாமல் ஒற்றை வரியில் rejected என்று மட்டும் தெரிவித்திருப்பது சேவை குறைபாடு” என வாதிட்டனர். தொடர்ந்து நீதிபதி, “பட்டா மாறுதல் கோரி மனுதாரர், தாசில்தார் அலுவலகத்தில் சேவை கட்டணம் செலுத்தி மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனு தாசில்தாரால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு தாசில்தாரால் மனு நிராகரிக்கப்பட்டால், இதுகுறித்து சம்பந்தப்பட்ட மனுதாரர், டிஆர்ஓ (DRO) வசம் சீராய்வு மனு அளிக்கலாம். அல்லது உரிமையியல் நீதிமன்றத்தை நாடி தீர்வு பெறலாம். அதேநேரம் மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணத்தைச் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் தெரிவிக்கவில்லை.

Rejected என்று ஒற்றை வார்த்தையை மட்டுமே விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளார். காரணம் தெரிவிக்காமல் விண்ணப்பம் தள்ளுபடி செய்தது சேவை குறைபாடுதான். எனவே 13.08.2016 அன்று பணியிலிருந்த வட்டாட்சியர், சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு 5,000 ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும். மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக உயர் அலுவலர்கள் அல்லது உரிமையியல் நீதிமன்றத்தை நாட வேண்டும்” என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவின் புடவைகள் உட்பட 29 பொருட்கள் ஏலம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.