அரியலூர் மாவட்டம் அண்ணா சிலை அருகே கிராம செவிலியர் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் சுகாதார செவிலியர் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நிபந்தனையின்றி ரத்துசெய்ய வேண்டும் என கோரிக்கைவிடுக்கப்பட்டது.
மேலும் பிற நிலையினரின் பணியினை திணிப்பதை நிறுத்த வேண்டும், காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கிராம சுகாதார செவிலியர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: அண்ணா நினைவு நாள்: அரசியல் கட்சியினர் மரியாதை