அரியலூர் மாவட்டத்தில் கரோனா பரவுதலைக் கட்டுப்படுத்தும் வகையில் மூன்று வண்ண அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், இறைச்சி கடைகள், பெட்ரோல் பங்குகள், உழவர் சந்தை உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
இதனால் தெருக்களில் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதனிடையே, காவல்துறையினர் ஆங்காங்கே சோதனைச்சாவடிகளை அமைத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமையில் அதிகம் பொதுமக்கள் கூடுவதை தவிர்த்து வீடுகளிலேயே தங்கவைத்து, மீண்டும் ஒரு முழுஅடைப்பு ஊரடங்கை மாவட்ட ஆட்சியர் ரத்னா செயல்படுத்தியுள்ளார்.
மேலும், வாரம்தோறும் இந்த நடவடிக்கை செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரியலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களும் ஆதரவு அளித்து தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: செந்துறையை சுற்றி வளையம் அமைத்து பாதுகாப்பு பணி