அரியலூர் மாவட்டம் விளாங்குடி- காவனூா் அம்பாப்பூா் பகுதியை இணைக்கும் வகையில் சுத்தமல்லி ஓடை தரைப்பாலம் உள்ளது. இந்தப் பாலத்தின் வழியே காவனூர், அம்பாப்பூா், காத்தான்குடிகாடு, கிளிமங்கலம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நாள்தோறும் அரியலூர் செல்ல பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், தற்போது அரியலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சுத்தமல்லி ஓடை தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால், அரியலூருக்கு வந்த பொதுமக்கள் மீண்டும் பாலத்தைக் கடந்து அக்கரைக்குச் செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதன் காரணமாக பத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பாலத்தைக் கடக்க முடியாமல் தவிக்கும் பொதுமக்களை இருசக்கர வாகனத்தில், ஒரு கரையிலிருந்து மறு கரைக்குக் கொண்டு சென்று விடுகின்றனர். இதுவும் பகல் நேரத்தில் மட்டுமே முடியும் எனவும்; மழைக் காலங்களில் இதுபோன்ற போக்குவரத்துத் தடை ஏற்பட்டுள்ளது என கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதனிடையே, தங்களுக்கு உயர் மட்ட பாலம் அமைத்துத் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: