அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து திட்டக்குடி வரை செல்லும் தனியார் பேருந்து, மாலை நேரத்தில் பேருந்து நிலையத்திற்கு வெளியே சுமார் அரை மணி நேரம் கிடப்பில் போடப்படுவதாக அரசுப் போக்குவரத்து அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அரியலூர் கிளை மேலாளர் தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, "ஏன் இவ்வளவு காலதாமதமாக செல்கிறீர்கள். உங்களது வண்டி செல்ல வேண்டிய நேரத்திற்கு செல்ல வேண்டியதுதானே. உங்களது வண்டி காலதாமதமாக சென்றால் அரசுப் பேருந்துக்கு முறையாக வருமானம் கிடைக்காது" என்று முறையிட்டுள்ளார்.
இதற்கு தனியார் பேருந்து ஓட்டுநர் முறையாக பதில் தராததால், தனியார் பேருந்தில் இருந்த பயணிகளை அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் ஏற்றிச் சென்றனர். அப்போது, தனியார் பேருந்தில் பயணித்த சில பயணிகள் ”நீங்கள் சரியான நேரத்திற்கு பேருந்தை இயக்கினால் நாங்கள் ஏன் சிரமப்பட போகிறோம்” என அலுவலர்களிடம் கேள்வி எழுப்பினர். அரசு அலுவலர்கள் அலட்சியமாக இருந்துவிட்டு, அரசுக்கு வருவாய் ஈட்டும் விதமாக நடந்துகொண்டது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மேலவளவு படுகொலை: 13 பேரின் முன்விடுதலை வழக்கின் இடைக்கால உத்தரவுகள் வாபஸ்